/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்
/
விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்
விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்
விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்
ADDED : ஜன 14, 2024 05:06 AM
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒப்பந்த நிறுவனமான எக்கோ கம்பெனி சார்பில் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு பாதாள சாக்கடை பணிகளின் போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த பணி தொழிலாளர் ஜான் பீட்டர் 32, விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை தொட்டிக்குள் விழுந்தார். பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த சைட் இன்ஜினியர் கோவிந்தராஜ் 28, அவரை மீட்க முயன்று தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 30 லட்சம் காசோலை ஒப்பந்ததாரர் நிறுவனம் வழங்கியது. தாசில்தார் ராமச்சந்திரன், டி.எஸ்.பி., ப்ரீத்தி உடன் இருந்தனர்.