/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
''இ.3 சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்''
/
''இ.3 சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்''
ADDED : செப் 29, 2024 05:42 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இ.3 சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் அறிவுறுத்தினார்.
அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. துணை தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், இன்ஜினியர் அபுபக்கர் சித்திக், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்): மழை காலம் துவங்குகிற நிலையில், வாறுகால்களை தூர் வாருங்கள். விருதுநகர் ரோட்டிலிருந்து பாவடிதோப்பு வரையுள்ள வாறுகால்களை தூர் வாருங்கள்.
முருகானந்தம், (பா.ஜ.,): நகராட்சி கூட்டத்திற்கு தொடர்ந்து 3 முறை வராத கவுன்சிலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா
ராமதிலகம், (அ.தி.மு.க.,): மழை கால முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ன எடுத்துள்ளீர்கள்.
அப்துல்ரகுமான், (தி.முக.,):இ.3 சாலை 2011ல் லிருந்து பேசப்பட்டு வருகிறது. நகரில் இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். வாகனங்களும் குறையும். செயல்பட நடவடிக்கை எடுங்கள்.
சுந்தரலட்சுமி, தலைவர்:விருதுநகரில் நடைபெறுகின்ற புத்தக திருவிழாவிற்கு அனைத்து கவுன்சிலர்களும் செல்ல வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது.