/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் மது, குட்கா, கஞ்சா விற்பனை செய்த 3521 பேர் கைது
/
மாவட்டத்தில் மது, குட்கா, கஞ்சா விற்பனை செய்த 3521 பேர் கைது
மாவட்டத்தில் மது, குட்கா, கஞ்சா விற்பனை செய்த 3521 பேர் கைது
மாவட்டத்தில் மது, குட்கா, கஞ்சா விற்பனை செய்த 3521 பேர் கைது
ADDED : ஆக 12, 2025 06:08 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை, குட்கா, கஞ்சா பதுக்கல், விற்பனையில் ஈடுபட்ட 3324 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு3521 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என எஸ்.பி., கண்ணன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் அனைத்து போலீஸ் உட்கோட்டங்களிலும் ஆக. 2 முதல் ஆக. 10 வரை போதை ஒழிப்பு வார விழாவை முன்னிட்டு 444 பள்ளிகள், கல்லுாரிகளிலும், 535 பொது இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.
மேலும் போதை ஒழிப்பு தொடர்பாக 2025ல் இதுவரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 186 பேர் மீது வழக்கு பதிவு செய்து 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.6.89 லட்சம் மதிப்புடைய கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தடை குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 1158 பேர் மீது வழக்கு பதிவு செய்து 1230 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.24.11 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்கள், ரூ.30.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட 1980 பேர் மீது வழக்கு பதிவு செய்து 2025 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.26.25 லட்சம் மதிப்புடைய மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விருதுநகர் எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார்.