ADDED : செப் 20, 2026 05:13 PM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே நில தகராறு தொடர்பாக ஏற்பட்ட கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுளத்தை சேர்ந்த வீரப்பதேவர் 56, அதே பகுதியை சேர்ந்தவர் சுந்தரம், இவரது மருமகன் முத்துராமலிங்கம் ஆகியோருக்கும், மேலபாறை குளத்தை சேர்ந்த முத்துக்குமார் 30,க்கும் நிலத்தகராறு இருந்தது.
இந்நிலையில் 2019ல், முத்துக்குமார், வெள்ளைச்சாமி 28, முனியாண்டி 26, முத்தம்மாள் 55, ஆகியோர் பொம்ம நாயக்கன்பட்டி மயானக்கரை அருகே வந்து கொண்டிருந்த வீரப்பன் தேவரை வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்தான வழக்கு அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதி மன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தகுமார் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
