ADDED : ஜன 30, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரின் வச்சக்காரப்பட்டி அருகே ஆர்.ஆர்., நகரில் பட்டாசு ஆலையில் ஜன. 24 காலை 9:30 மணிக்கு மூலப்பொருள் கலவையின் போது ஏற்பட்ட விபத்தில் முதலிப்பட்டியைச் சேர்ந்த வீரக்குமார் 55, கன்னிச்சேரிபுதுாரைச் சேர்ந்த காளிராஜ் 20 பலியாகினர்.
இதில்மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவரில் கம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் 25, ஜன. 24 இரவு பலியானார்.
இனாம் ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி 17, ஜன. 28 இரவு 11:50 மணிக்கு பலியானார். இந்த பட்டாசு வெடி விபத்தில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.