/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்
/
டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்
டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்
டூ வீலர் மீது பஸ் மோதல் ராணுவ வீரர் உட்பட 4 பேர் காயம்
ADDED : மே 16, 2025 02:51 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே முத்துராமலிங்க புரத்தை சேர்ந்த ராணுவ வீரர் அருண்குமார் 36, இவர் தனது மனைவி கார்த்திகா 33, மகள் பவதாரணி 8, ஆகியோருடன் டூவீலரில் நேற்று முன்தினம் மதியம் 1:30 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரத்தில் உறவினர் சரவணன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்பு சரவணனின் மகன் சபரீசன், 11, மற்றும் தன் குடும்பத்தாருடன் முத்துராமலிங்கபுரம் சென்ற போது அருப்புக்கோட்டை -சாயல்குடி ரோட்டில் பின்னால் வந்த தனியார் பஸ் டூவீலரில் உரசி சென்றது. இதில் படுகாயம் அடைந்த அருண்குமார், சபரீசன் மதுரை அரசு மருத்துவமனையிலும், கார்த்திகா, பவதாரணி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். எம். ரெட்டியபட்டி போலீசார் பஸ் டிரைவர் சங்கர்ராஜ்,32, கைது செய்து விசாரிக்கின்றனர்.