/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தள்ளிவிட்டதில் டிரைவர் பலி 4 பேர் கைது
/
தள்ளிவிட்டதில் டிரைவர் பலி 4 பேர் கைது
ADDED : அக் 29, 2024 04:30 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் டாஸ்மாக் பார் அருகில் மது போதையில் தள்ளி விட்டதில் டிரைவர் மாரியப்பன் உயிரிழந்த சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆராய்ச்சி பட்டி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் 45, மினி வேன் டிரைவர். இவர் அக்.23 இரவு 11:00 மணி அளவில் ராமகிருஷ்ணாபுரம் டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு வரும்போது தடுமாறி விழுந்ததில் நெற்றியில் காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக தற்கொலை மரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து மாரியப்பன் உடல் பிரேத பரிசோதனைக்குபின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரேத பரிசோதனையில் மாரியப்பனின் தலையில் காயம் உள்ளதாக டாக்டர் தெரிவித்ததையடுத்து அப்பகுதி கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்ததில், மது போதையில் பார் அருகில் நின்று கொண்டிருந்த மாரியப்பன், அங்கிருந்த 4 பேருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த அவர் காயமடைந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில், மங்காபுரத்தைச் சேர்ந்த டிரைவர் தங்கபாண்டியன் 30, ராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மதன்குமார் 30, பாலகுரு 28, விஷ்ணு பிரகாஷ் 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.