/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 5 விருதுகள்
/
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 5 விருதுகள்
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 5 விருதுகள்
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு 5 விருதுகள்
ADDED : செப் 09, 2025 03:34 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக 5 விருதுகளை பெற்றுள்ளது.
ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்ட வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையம் 10 வது மண்டலத்தில், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 72 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மதிப்பாய்வு கருத்தரங்கு நடத்தப்பட்டு சிறந்த வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 2024-25ம் ஆண்டிற்கான மதிப்பாய்வு கருத்தரங்கு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இதில் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிற திட்டத்திற்காக தொடர்ந்து 3 ஆண்டுகளாக விருது கிடைத்த நிலையில், அதிக எண்ணிக்கையில் தொழிற்சார் பயிற்சிகள் அளிப்பது, விவசாயிகளுக்கு பண்ணை ஆலோசனைகளை வழங்குவது, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது, ஆண்டு அறிக்கையை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பது உள்ளிட்ட 5 விருதுகளை பெற்றுள்ளது. விருதுகளை வேளாண் தொழில் நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையத்தின் மண்டல இயக்குனர் ஷேக் நா.மீரா மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக கல்வி இயக்குனர் முருகன் ஆகியோர் வழங்கினர். விருதை அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் பெற்றுக் கொண்டார்.