/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., நான்குவழிச்சாலையில் கார் மோதி 5 ஆடுகள் பலி தடுப்பு நடவடிக்கை அவசியம்

ADDED : அக் 07, 2025 03:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் கார் மோதியதில் 5 ஆடுகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலையில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வமாக பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இருந்த போதிலும் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் இந்த நான்கு வழிச்சாலை மூலம் ஸ்ரீவில்லிபுத்துார் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் தற்போது ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை சென்ற கார் மோதியதில் 5 ஆடுகள் சம்பவ இடத்தில் பலியானது.
இந்த வழித்தடம் முழுவதும் விவசாய பகுதியை சார்ந்து இருப்பதால் ஆடு, மாடுகள் மேய்க்கப்படுகிறது.
இதில் சில சமயங்களில் ஆடு, மாடுகள் ரோட்டின் குறுக்காக சென்று விடுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே, விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.