/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் கழிவு நீரை கால்வாயில் விடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

ADDED : அக் 07, 2025 03:31 AM
காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சியில் வெளியேறும் கழிவு நீரை சென்னம்பட்டி கால்வாயில் கடத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ராம் பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:
குண்டாற்றில் வரும் மழை நீர் சென்னம்பட்டியில் தடுப்பணை கட்டப்பட்டு, வேப்பங்குளம், கே. கரிசல்குளம் கண்மாய்களுக்கு பாய்ந்து காரியாபட்டி செவல்பட்டி வழியாக கழுவனச்சேரி, சித்து மூன்றடைப்பு, அள்ளிக்குளம், ஆத்திகுளம் கண்மாய்க்கு நீர் வரத்துக்கு கால்வாய் ஏற்படுத்தப்பட்டது.
குடிநீர், விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்நிலையில் காரியாபட்டி பேரூராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கால்வாய் வழியாக கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் குடிநீர் விவசாயம் பாதிக்கக்கூடும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கலந்து கண்மாயில் பெருகினால் மக்கள் குடியிருக்க முடியாது. பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீர் செல்லும் இடத்தை ஆய்வு செய்து மாற்று வழித்தடத்தில் கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.