/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் 619 உணவு மாதிரிகள் சோதனைக்கு சேகரிப்பு; 46 தரமற்றது, பாதுகாப்பற்றது என அறிக்கை
/
மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் 619 உணவு மாதிரிகள் சோதனைக்கு சேகரிப்பு; 46 தரமற்றது, பாதுகாப்பற்றது என அறிக்கை
மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் 619 உணவு மாதிரிகள் சோதனைக்கு சேகரிப்பு; 46 தரமற்றது, பாதுகாப்பற்றது என அறிக்கை
மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டில் 619 உணவு மாதிரிகள் சோதனைக்கு சேகரிப்பு; 46 தரமற்றது, பாதுகாப்பற்றது என அறிக்கை
ADDED : மே 13, 2025 06:26 AM

மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் கலப்படம் செய்யப்பட்ட தரம் குறைவான உணவு பொருட்கள், தடை உணவு பொருட்கள் விற்பனை செய்வது போன்றவை சம்பந்தமாக தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
2024-25ல் ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரிகள், குளிர்பான கடைகள், கறிக்கடைகள், தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றில் ஆய்வு செய்யப்பட்டு 619 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 46 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றது, தரம் குறைவானது என அறிக்கைகள் வரப்பெற்றுள்ளது.
அறிக்கை முடிவுகளின் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம், மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றம் மூலம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25ல் மாவட்ட நீதிமன்றத்தில் 11 வழக்குகளுக்கு ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும், மாவட்ட வருவாய் அலுவலர் நீமதின்றத்தில் 16 வழக்குகளுக்கு ரூ.2.26 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒரு முறைக்கு மேல் உபயோகப்படுத்தப்படும் சமையல் எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடும் மக்களுக்கு அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம், வலிப்பு நோய், இதய சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஓட்டல்கள், இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள், பேக்கரி போன்ற இடங்களில் இருந்து கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பயோடீசல் தயாரிப்பிற்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் கூறியதாவது: மக்கள் உணவு பொருள் கலப்படம், தடை புகையிலை கலந்துள்ள உணவு பொருட்கள், கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் போன்றவை விற்பனை குறித்து புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது 04562 225255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.