/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கடைகளில் 63 கிலோ சுவீட்ஸ் பறிமுதல்
/
கடைகளில் 63 கிலோ சுவீட்ஸ் பறிமுதல்
ADDED : அக் 16, 2025 05:37 AM
விருதுநகர்: விருதுநகர் மதுரை ரோட்டில் தீபாவளியை முன்னிட்டு உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு ஆகியோர் அடங்கிய குழுவினர் பேக்கரி, சுவீட்ஸ்டால்களில் ஆய்வு செய்தனர்.
ஒரு சுவீட்ஸ் கடையில் காலாவதியான பிறந்தநாள் கேக் 8.5 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 10.8 கிலோ காரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடையில் உரிமம் இல்லாமல் நடந்த டீ விற்பனையையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் இதே ரோட்டில் கடைகளில் நடத்திய ஆய்வில் மொத்தம் 63.1 கிலோ, சுவீட்ஸ், 2 லிட்டர் ரோஸ்மில்க் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.