/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிகளில் 'மாணவர் மனசு' பெட்டி புகார்களுக்கு தீர்வு காண வேண்டும் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வலியுறுத்தல்

ADDED : அக் 16, 2025 04:57 AM
விருதுநகர்: விருதுநகரில் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜெயசுதா தலைமையில் ஆணைய கூராய்வுக் கூட்டம் நடந்தது.
அவர் பேசியதாவது: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் 'மாணவர் மனசு' ஆலோசனைப்பெட்டியும், தனியார் பள்ளிகளில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
இப்பெட்டிகளில் மாணவர்கள் போடும் புகார் கடிதங்களை பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். இப்புகார் குறித்த பதிவேடுகளை பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் பராமரிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் கட்டாயம் நியமிக்க வேண்டும்.
மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கள ஆய்வு செய்ய அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழந்தைத் திருமணம், தொழிலாளர், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு முன் ஒப்படைத்து குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பின் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குழந்தைகள், பெற்றோர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகள் நலக்குழு முன் ஆஜராகவேண்டும், என்றார்.
கூட்டத்திற்கு பின் சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா என ஆய்வு நடத்தினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பங்கேற்றனர்.