ADDED : ஜூலை 10, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ண ராஜா. இவரது மனைவி மகேஸ்வரி 65, நேற்று மதியம் 12:30 க்கு கடைக்கு பொருள் வாங்க நடந்து சென்றார்.
ஹெல்மெட் அணிந்து டூவீலரில் சென்று கொண்டிருந்த இளைஞர் திடீரென மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை அறுத்து தப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர்.

