/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்கள் உரசியதில் ஆசிரியர் உட்பட 7 மாணவர்கள் காயம்
/
பஸ்கள் உரசியதில் ஆசிரியர் உட்பட 7 மாணவர்கள் காயம்
ADDED : செப் 09, 2025 03:33 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தனியார் பஸ்சும், பள்ளிக்கு சென்ற பஸ்சும் மோதி கொண்டதில், ஆசிரியர் உட்பட 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
நேற்று காலை 9:00 மணிக்கு, விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு தனியார் பயணிகள் பஸ் வந்து கொண்டிருந்தது. அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் இருந்து பாலவநத்தம் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி பஸ் சென்று கொண்டிருந்தது.
அருப்புக்கோட்டை விருதுநகர் ரோடு தனியார் பள்ளி அருகில், வந்த போது 2 பஸ்களும் உரசிக் கொண்டதில், பள்ளி பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில் 11ம் வகுப்பு மாணவர்கள் பந்தல்குடியை சேர்ந்த வீராஜ்,16, முகமது ஜுபைர், 16, பிரதீப் கண்ணன், 16, அஸ்வின் குமார், 16, ஜெயராகுல், 16, ஆசிரியர் முத்துபாண்டி 36, உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.