/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்
/
பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்
பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்
பெங்களூரு ரயிலில் 73 கி., குட்கா பறிமுதல் மூன்று பேருக்கு அபராதம்
ADDED : ஜூலை 24, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வந்த பெங்களூரு -- நாகர்கோவில் ரயிலில் போலீசார், உணவுப்பாதுகாப்புத்துறை இணைந்து தடை புகையிலை கடத்தல் குறித்து சோதனை செய்தனர்.
இதில் முன்வகுப்பு பொதுப்பெட்டியில் 73 கிலோ தடை குட்காவை கோவில்பட்டிக்கு கடத்த முயன்ற புதுக்கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ 19, உட்பட இரு சிறுவர்களை கண்டறிந்தனர். இவர்களுக்கு உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தடை குட்காவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.