/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.7.38 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
/
ரூ.7.38 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 11, 2011 10:53 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகேயுள்ள தடியனேந்தலை சேர்ந்தவர் இருளப்பன்(60).
இவர் 2010 பிப்ரவரி 24 ம் தேதி காலை 7 மணிக்கு மதுரை- அருப்புக்கோட்டை ரோடு கோவிலாங்குளம் விலக்கு அருகே சுரேஷ்குமார் என்பவர் ஓட்டி சென்ற வேனில் சென்றார். திடீரென வேன் விபத்துக்குள்ளானதில் இருளப்பன் இறந்தார். மனைவி அழகம்மாள் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் முறையீடு செய்தார். நேற்று நடந்த விசாரனையில் அழகம்மாளுக்கு, மதுரை ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்ஸ்சுரன்ஸ் கம்பெனி 3 லட்சத்து ஆறாயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விருதுநகர் சப் கோர்ட் நீதிபதி ஏ. லியாகத் அலி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு: ஆமத்தூர் மருதநத்தத்தை சேர்ந்தவர் திம்மி மகன் மாரிச்சாமி. இவர் 2009 நவம்பர் 28 ம் தேதி காலை 10.30 மணிக்கு விருதுநகர்- சாத்தூர் மெயின் ரோட்டிலுள்ள மாத்தநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்த மாருதி ஆல்டோ கார் மோதியதில் காயமடைந்தார்.
இம்மனு மீதான விசாரனையில் நேற்று திருப்பூர் நியூ இந்தியா இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க ÷ண்டும் என விருதுநகர் சப் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.