/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
/
சிவகாசியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
ADDED : ஜன 04, 2025 11:16 PM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பி.திருவேங்கடபுரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனர்.
சிவகாசி அண்ணாகாலனியைச் சேர்ந்தவர் தருண்குமார் 24. இவரிடம் கஞ்சா புழங்குவதாக கிடைத்த தகவலின்படி எஸ்.ஐ., சுரேந்தர் தலைமையிலான தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் போலீசாரிடம் பி.திருவேங்கடபுரத்திலிருந்து தனக்கு கஞ்சா கிடைத்ததாக கூறினார். போலீசார் பி.திருவேங்கடபுரத்தைச் சேர்ந்த அழகுராஜ் 26, ராஜகுரு 21, ஆகியோரை விசாரிக்கையில் இருவரும் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.