நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்தவர் பாக்கியம், 48, அதே ஊரைச் சேர்ந்த ராஜா தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பண்ணையில் வைத்து ஆடு வளர்த்து வருகிறார்.
ஆடுகளை நாராயணன் மேய்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆடுகளுக்கு தண்ணீர் வைத்து மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்ற போது ஒவ்வொரு ஆடுகளாக மயங்கி விழுந்து இறந்துள்ளது. ஒரு சில ஆடுகள் மிரண்டு ஓடியுள்ளன. பண்ணைக்குள் சென்று பார்த்த போது 4 கிடாய்கள், 5 ஆடுகள் என மொத்தம் 9 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். - -