/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
265 கிராம் கஞ்சா பறிமுதல் விற்பனை செய்த 9 பேர் கைது
/
265 கிராம் கஞ்சா பறிமுதல் விற்பனை செய்த 9 பேர் கைது
265 கிராம் கஞ்சா பறிமுதல் விற்பனை செய்த 9 பேர் கைது
265 கிராம் கஞ்சா பறிமுதல் விற்பனை செய்த 9 பேர் கைது
ADDED : செப் 24, 2024 04:09 AM
ராஜபாளையம்: மாவட்டத்தில் நேற்று முன்தினம் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 265 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அழகுமாணிக்கம் 20, இவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு வைத்தியநாதபுரம் தெருவில் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் 20, இவரிடமிருந்து 20 கிராம் கஞ்சா,. காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரத்குமார் 26, என்பவரிடமிருந்து 25 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கைது செய்துள்ளனர்.
சாத்துார் மேலக்காந்தி நகரை சேர்ந்த் காளியப்பனிடம் 34,எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார். சிவகாசி திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த மாடசாமி 42, மாரீஸ்வரன் 27, ஆகியோரை திருத்தங்கல் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
முனீஸ் நகரை சேர்ந்தவர் முருகன் 27. இவர் கொங்கலாபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த போது டவுன் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விருதுநகர் ரோசல்பட்டி அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல் 22.
இவர் அல்லம்பட்டியில் 100 கிராம் கஞ்சாவை சிறுவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்ததை கிழக்கு போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர். ஏ.டி., புது தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன். ஓடைப்பட்டி தெரு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை ஊரகப் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்.