/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
95 * 10க்கும் குறைவான மாணவர் கொண்ட பள்ளிகள் * எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்
/
95 * 10க்கும் குறைவான மாணவர் கொண்ட பள்ளிகள் * எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்
95 * 10க்கும் குறைவான மாணவர் கொண்ட பள்ளிகள் * எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்
95 * 10க்கும் குறைவான மாணவர் கொண்ட பள்ளிகள் * எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்
ADDED : செப் 25, 2024 03:31 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 10க்கும் குறைவான மாணவர் கொண்ட துவக்க பள்ளிகளின் எண்ணிக்கை 95 ஆக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன தேவைப்படுகிறது என்பதை பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் 10க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் துவக்கப்பள்ளிகள் 95 உள்ளன. கிராமப்புற மாணவர்கள் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் துவங்கப்பட்டன. ஆனால் இவற்றில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது மாணவர்களின் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக கிராமப்புறங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தனியார் பள்ளிகள் அதிகரிப்பும், உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க காட்டப்படும் ஆர்வமும் தான் என்கின்றனர். ஆனால் அவற்றை விட திறன்மிக்க அரசு ஆசிரியர் பணிபுரியும் பள்ளி தான் இவைஎன்ற கருத்து ஏற்கப்படுவதே கிடையாது. 95 பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் மாணவர்கள் எண்ணிக்கையை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்பது விதி, ஆனால் பல இடங்களில் ஆறு மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றால் செலவினங்கள் அதிகரித்து வருவதாக அரசு கருதி 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் கணக்கிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தொடக்கக் கல்வித்துறை மத்திய அரசின் விதிமுறைகளின் படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என முன்பிருந்தே அறிவுறுத்தி வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே எடுக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும் தற்போதைய சூழலில் மாவட்டத்தில் 10க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட துவக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 95.
விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 71, சிவகாசி கல்வி மாவட்டத்தில் 24 துவக்கப்பள்ளிகள் என 95 பள்ளிகள் உள்ளன. இதில் சாத்துாரில் 18 பள்ளிகள் வரை உள்ளன.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு ஒரே தீர்வு பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படுவது தான். மேலும் மாணவர்கள் விடுபடாமல் தொடர்ந்து கல்வி பயில தேவையான பஸ் வசதி போன்றவையும் அவசியமாகிறது. கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது, என்றார்.
சமூக ஆர்வலர் வீரப்பெருமாள் கூறியதாவது: தொடர்ச்சியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவது கூட இது போன்ற சூழலுக்கு காரணமாக இருக்கலாம். துவக்கப்பள்ளி தான் மிக முக்கியமானது. இதில் தேறும் மாணவர்கள் தான் அடுத்தடுத்த நிலைக்கு சென்று உயர்கல்விக்கு செல்ல முடியும். ஆனால் தற்போது துவக்கக்கல்வியே ஆட்டம் கண்டுள்ளது. சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்தால் நிச்சயம் மாணவர்களின் எண்ணிக்கை உயரும். அதற்கு உதாரணமாக மாவட்டத்திலே பல அரசு பள்ளிகள் உள்ளன, என்றார்.
அட்டவணை
வட்டாரம்/ எண்ணிக்கை
விருதுநகர்/ 9
திருச்சுழி/ 11
அருப்புக்கோட்டை/ 8
காரியாபட்டி/ 13
நரிக்குடி/ 12
சாத்துார்/ 18
ஸ்ரீவில்லிபுத்துார்/ 8
சிவகாசி/ 3
ராஜபாளையம்/ 13