/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்சி பொருளாக தாய்மார்கள் பாலூட்டும் அறை
/
காட்சி பொருளாக தாய்மார்கள் பாலூட்டும் அறை
ADDED : ஜூலை 05, 2025 02:51 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி பஸ் ஸ்டாண்டில் பல மாதங்களாக தாய்மார்கள் பாலூட்டும் அறை செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது.
கூமாபட்டியில் பல்லாயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வெளியூரை சேர்ந்த ஏராளமான மக்களும் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வந்து செல்லும் தாய்மார்களின் நலன் கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொடிக்குளம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாலூட்டும் அறை ஒன்று வைக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்திற்காகவோ இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது.
இதனால் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருகிறது. எனவே, காலதாமதம் இன்றி தாய்மார்கள் பாலூட்டும் அறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாகும்.