/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் தீப்பற்றி எரிந்த கார்
/
சாத்துாரில் தீப்பற்றி எரிந்த கார்
ADDED : பிப் 04, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் போக்குவரத்து நகரில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
ஓ மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன், 32 . இவர் நேற்று மதியம் இவரது மருமகன் வைரம் ,24. ஆகியோருடன் சாத்துார் வைப்பற்றில் குளிப்பதற்காக காரில் வந்தனர்.
மதியம் 3:00மணிக்கு ஆற்றில் குளித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். போக்குவரத்து நகர் வழியாக ஓ .மேட்டுப்பட்டிக்கு கார் சென்றபோது இன்ஜினில் இருந்து புகை கிளம்பியது.
காரில் வந்தவர்கள் கீழே இறங்கி பார்த்தபோது கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.