ADDED : ஜூன் 25, 2025 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் சாவிலும் இணைபிரியாத தம்பதியால் உறவினர்கள், குடும்பத்தினர் சோகத்திலும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் 77. இங்குள்ள நின்ற நாராயண பெருமாள் கோயில் ஸ்தானிகமாக இருந்தார். இவரது மனைவி ஜனகவள்ளி 71. இவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று காலை 8:00 மணி அளவில் இறந்தார். குடும்பத்தினர், உறவினர்கள் அவரது இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்த நிலையில் கோபாலகிருஷ்ணன் சோகமாக இருந்தார். இந்நிலையில் மதியம் ஒரு மணி அளவில் அவரும் இறந்தார். சாவிலும் இணை பிரியாத தம்பதியால் சோகத்திலும் நெகிழ்ச்சி அடைந்தனர்.