/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகாராஜபுரத்தில் சேதமடைந்த பூங்கா
/
மகாராஜபுரத்தில் சேதமடைந்த பூங்கா
ADDED : நவ 10, 2024 06:59 AM
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரத்தில் ரூ. 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா, உடற்பயிற்சி கூடம் சேதமடைந்தும், கருவிகள் பயன்படுத்த முடியாமல் வீணாகியும் காணப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் தாய் திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் மகாராஜபுரத்தில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. இதனை அப்பகுதி இளைஞர்கள், குழந்தைகள், மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
சில ஆண்டுகள் கழிந்த நிலையில் கட்டடங்கள் சேதமடைந்தது. உடற்பயிற்சி கருவிகள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பூங்கா மூடப்பட்டது.
ஊராட்சி நிர்வாகம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் அலட்சிய போக்குடன் இருந்ததால் குடிமகன்கள் இந்த பூங்காவை பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ. 30 லட்சம் வீணானது தான் மிச்சம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவையும், உடற்பயிற்சி கூடத்தையும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மகாராஜபுரம் ஊராட்சி மக்களின் எதிர்பார்ப்பாகும்.