ADDED : பிப் 22, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : கோடை காலம் துவங்கியதால் செடி, கொடிகள், ரோட்டோரம் உள்ள புற்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தண்ணீரின்றி கருகின.
காரியாபட்டி கல்குறிச்சி அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் மர்ம நபர்கள் காய்ந்த செடி, கொடி, புற்களுக்கு தீ வைத்தனர். காற்றுக்கு 600 மீட்டர் தூரம் பரவியது. அந்த வழியாக வாகனங்களில் பயணித்தவர்கள் அனல் தாக்கி பாதிக்கப்பட்டனர்.
வாகனங்கள் தீப்பற்றுமோ என்கிற அச்சத்தில் கடந்து சென்றனர். மேலும் அப்பகுதிகளில் இருந்த மரம், செடிகள் தீயினால் கருகும் அபாயம் இருந்தது. தகவலறிந்த காரியாபட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.