ADDED : ஆக 26, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி, ஆக.26-
காரியாபட்டி தோப்பூரை சேர்ந்த கணேசன் மகன் கருப்புராஜா 22. இவர், வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று இரவில் வீட்டின் முன் கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, செம்மறி கிடாய் காணாமல் போனது தெரிந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் மதிப்பு ரூ.30 ஆயிரம்.
காரியாபட்டி எஸ்.ஐ., வீரணன் தலைமையிலான போலீசார் விசாரித்ததில், மதுரை பரம்புப்பட்டியை சேர்ந்த தினேஷ் 22, பால்பாண்டி 26 திருடியது தெரிந்தது. தினேஷை கைது செய்து, மற்றொருவரை தேடி வருகின்றனர்.
படம் உண்டு.
