/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பஸ் மோதி வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
/
அரசு பஸ் மோதி வீட்டு சுவர் இடிந்து விழுந்தது
ADDED : ஏப் 09, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோட்டில் வேகமாக வந்த அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோடு ஒரு வழி பாதையாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பஸ் முன்னே சென்ற காரை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டின் சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் யாருக்கும் காயமில்லை. இப்பகுதியில் வாகனங்களின் அசுர வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்த்துள்ளனர்.