ADDED : அக் 22, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த போலீசாரின் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையம் உட்கோட்ட போலீஸ் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது.
ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமான் கொடியசைத்து துவக்கினார். நிகழ்ச்சி தொடக்கத்தில் உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் காந்தி சிலை அருகே போட்டி தொடங்கி, ரயில்வே பீடர் ரோடு, டி.பி மில்ஸ் ரோடு, பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியே 2.5 கி.மீ தொலைவிற்கு காந்தி சிலை ரவுண்டானா அருகே முடிந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.