/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் மாணவிகள் விடுதி தேவை புதிய கட்டடம்
/
இடியும் நிலையில் மாணவிகள் விடுதி தேவை புதிய கட்டடம்
இடியும் நிலையில் மாணவிகள் விடுதி தேவை புதிய கட்டடம்
இடியும் நிலையில் மாணவிகள் விடுதி தேவை புதிய கட்டடம்
ADDED : மார் 06, 2024 05:45 AM

திருச்சுழி : திருச்சுழியில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதி கட்டடம் சேதமடைந்து, இடியும் நிலையில் உள்ளதால், புதிய கட்டடம் கட்ட வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.
திருச்சுழியில் அருப்புக்கோட்டை ரோட்டில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி கட்டடம் உள்ளது.
இங்கு திருச்சுழியை சுற்றியுள்ள செம்பொன்நெருஞ்சி, பனையூர், மேலேந்தல், குச்சம்பட்டி உட்பட பகுதிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
ஆனால் விடுதி கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால், பல பகுதிகளில் விரிசல் கண்டுள்ளது. கீழ்பகுதியில் சிமென்ட் பெயர்ந்து, செங்கல் வெளியில் தெரிகிறது.
கூரையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு தங்கி படிக்கும் மாணவிகள் பயத்துடன் உள்ளனர். கீழ் பகுதியை காலி செய்து விட்டு மாடியில் தான் தங்கி உள்ளனர்.
கட்டடத்தை பல முறை அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டதோடு தங்கள் கடமையை முடித்து கொண்டு விட்டனர். எனவே புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.

