/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத சுகாதார வளாகம், சீரமைக்காத ரோடு--
/
செயல்படாத சுகாதார வளாகம், சீரமைக்காத ரோடு--
ADDED : டிச 05, 2024 05:24 AM
தளவாய்புரம்: செட்டியார்பட்டி பேரூராட்சி1வது வார்டில் திறந்தவெளி அவலம்,நாய்கள் தொல்லை, சீரமைக்காத ரோடு என பல்வேறு குறைபாடுகளுடன் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
செட்டியார்பட்டி பேரூராட்சி 1வது வார்டு வனமூர்த்தி லிங்கம் பிள்ளை தெரு ஆறு மெயின் தெரு 20 சந்து பகுதிகளை உள்ளடக்கியது. குடியிருப்பு நடுவே செல்லும் மெயின் ரோடு குழாய் பதிக்க தோண்டி சீரமைக்காததால் சகதியாக மாறி உள்ளது.
சுகாதார வளாக வசதி இல்லாததால் திறந்தவெளிகளில் பயன்படுத்தி வருகின்றனர். மெயின் தெருக்களில் இரண்டு பக்கமும் வாறுகால் இல்லாததால் அதிக நீர்வரத்தில் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது.
குடியிருப்பு நடுவே உள்ள மேல்நிலைநீர் தொட்டி செயல்படாமல் உள்ளது. தனியார் பள்ளி அருகே குடிநீர் தொட்டிக்கான மின் பெட்டி விழும் நிலையில் ஆபத்து ஏற்படுத்தி வருகிறது.
வாறுகால் வேண்டும்
மாரிமுத்து, குடியிருப்பாளர்:நான்கு மெயின் தெருக்களிலும் குடியிருப்புகள் இடையே ஒரு பக்க வாறுகால் மட்டும் அமைத்துள்ளனர். மேடான பகுதியானதால் மழைக்காலங்களில் கழிவு நீர் வாறுகாலை விட்டு வெளியேறி பாதிக்கிறது. இரண்டு பக்கமும் வாறுகால் வேண்டும்
நாய்கள் பெருக்கம்
சித்ரா, குடியிருப்பாளர்: ரோட்டில் திரியும் தெரு நாய்கள் வாகனகங்களை விரட்டுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறத. பெண்கள், முதியோர், குழந்தைகளை விரட்டுவதால் கிழே விழுந்து வருகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரோடு சீரமைக்க வேண்டும்
வீரலட்சுமி, குடியிருப்பாளர்: பிப். மாதம் குடிநீர் பணிகளுக்கு என தோண்டப்பட்ட ரோடுகள்சீரமைப்பு முடிந்து சரி செய்யாமல் மேடு பள்ளங்களாக போட்டு வைத்துஉள்ளனர். இதனால் பள்ளங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். அவசரத்திற்கு ஆட்டோ வரவும் சிக்கல் ஏற்படுகிறது. சீரமைக்க வேண்டும்.
செயல்படாத சுகாதார வளாகம்
மணிகண்டன், குடியிருப்பாளர்: மலையை ஒட்டியபகுதியில் சுகாதார வளாகம் கட்டி ஒரு வருடம்ஆகிறது. செயல்பாட்டிற்கு வராமல் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதனால் நடைபாதையிலும் பள்ளி அருகிலும் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் உள்ளது.செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.