/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி
/
சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி
சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி
சாத்துாரில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலி
ADDED : பிப் 14, 2024 02:02 AM

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் ஏற முயன்றவர் தவறி விழுந்து பலியானார்.
நாகர்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன், 45. தாம்பரம் - - நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு ரயிலில் பயணித்தார். சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் 3வது பிளாட்பாரத்திற்கு நேற்று காலை 9:29 மணிக்கு வந்த ரயில் 9:32 மணிக்கு மீண்டும் கிளம்பியது. ரயிலில் இருந்து இறங்கிய மணிகண்டன், ரயில் கிளம்பியவுடன் அதில் ஏற முயன்றார்.
நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். ரயில் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் 40 நிமிடம் தாமதமாக காலை 10:14மணிக்கு ரயில் சாத்துாரில் இருந்து புறப்பட்டு சென்றது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.