/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கலில் குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
/
திருத்தங்கலில் குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
திருத்தங்கலில் குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
திருத்தங்கலில் குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
ADDED : மார் 14, 2024 03:06 AM

சிவகாசி; திருத்தங்கலில் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் முத்துமாரி நகர் , உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இரு மாதங்களாக குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடுகிறது. இதனால் அங்கு ரோடும் சேதமடைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். திருத்தங்கல் பகுதியில் கடந்த காலங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் 5 மாதங்களுக்கு முன்பிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இது அனைவருக்கும் போதாத நிலையில், அனைவரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்துவதால் குடிநீரின் தேவை அதிகரிக்கும்.
இந்நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் குழாய் உடைப்பினை உடனடியாக சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

