/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் மழை பெய்தும் நிரம்பாத ஏ. ராமலிங்கபுரம் கண்மாய் *விவசாயிகள் வேதனை
/
தொடர் மழை பெய்தும் நிரம்பாத ஏ. ராமலிங்கபுரம் கண்மாய் *விவசாயிகள் வேதனை
தொடர் மழை பெய்தும் நிரம்பாத ஏ. ராமலிங்கபுரம் கண்மாய் *விவசாயிகள் வேதனை
தொடர் மழை பெய்தும் நிரம்பாத ஏ. ராமலிங்கபுரம் கண்மாய் *விவசாயிகள் வேதனை
ADDED : டிச 11, 2025 06:36 AM

சாத்துார், சாத்துார் ஏ. இராமலிங்கபுரம் கண்மாய் தொடர் மழை பெய்த போதும் நிரம்பாததால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சாத்துார் வைப்பாறு வடிநிலப் பகுதிக்கு உட்பட்ட ஏ.இராமலிங்கபுரம் கண்மாய்க்கு முத்தால்நாயக்கன்பட்டி, சிந்தப் பள்ளி,மேட்டமலை , வெங்கடாஜலபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக நீர் வரத்து ஓடைகள் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்துார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் ஏ. இராமலிங்கபுரம் கண்மாய் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த கண்மாய் மூலம் பல நுாறு ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது.இந்த ஆண்டு பருவ மழை உரிய காலத்தில் துவங்கியதால் கண்மாய் நிரம்பி விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்தும் கண்மாய்க்கு போதுமான அளவு தண்ணீர் வரவில்லை.
தற்போது கண்மாய் பாதி அளவு மட்டுமே நிரம்பியுள்ளது. இந்தத் தண்ணீர் நெல் விவசாயத்திற்கு போதுமானது இல்லை என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மூலம் இந்தப் பகுதியில் தற்போது சூரியகாந்தி விளைவித்து உள்ளனர். கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து ஓடைகளில் அதிக அளவில் வளர்ந்துள்ள முள்செடிகள் காரணமாக நீர்வரத்து ஓடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் திசை மாறி காட்டுப் பகுதிக்கு செல்வதால் கண்மாய்க்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே நீர் வரத்து ஓடையை துரர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

