/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்புகளால் ரோட்டோர நடைபாதைகள் கபளீகரம் * ரோட்டில் நடந்து விபத்துக்கு உள்ளாகும் பாதசாரிகள்
/
ஆக்கிரமிப்புகளால் ரோட்டோர நடைபாதைகள் கபளீகரம் * ரோட்டில் நடந்து விபத்துக்கு உள்ளாகும் பாதசாரிகள்
ஆக்கிரமிப்புகளால் ரோட்டோர நடைபாதைகள் கபளீகரம் * ரோட்டில் நடந்து விபத்துக்கு உள்ளாகும் பாதசாரிகள்
ஆக்கிரமிப்புகளால் ரோட்டோர நடைபாதைகள் கபளீகரம் * ரோட்டில் நடந்து விபத்துக்கு உள்ளாகும் பாதசாரிகள்
ADDED : டிச 11, 2025 06:36 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் நடைபாதை இருந்தும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கித் தவிப்பதால் பாதசாரிகள் ரோட்டில் நடந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் எப்போதுமே நகரின் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு என்பது தீராத தொல்லையாகவே உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு என அனுமதிக்கப்பட்ட பகுதி உள்ளது. அதை தாண்டியும் பலர் மருத்துவமனை சுற்றுப்பகுதிகள், பஸ் ஸ்டாப்கள், நடைபாதையாக உள்ள ரோடுகளை ஆக்கிரமித்து தங்கள் சுயலாபத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதற்கு நகராட்சி அலுவலகத்தினரும் துணை போகின்றனர்.
குறிப்பாக விருதுநகர் அரசு மருத்துவமனையை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் தீர்ந்த பாடில்லை. மருத்துவமனை வளாக சுற்றுச்சுவரை யொட்டி நடை பாதை இருந்தும், அவை மண்தரையாக உள்ளதால் அவை லாரி நிறுத்துமிடமாகவும், சிலர் பாஸ்ட்புட் கடைகளும் போட்டுள்ளனர்.
இவர்களால் மருத்துவமனை வந்து பஸ் நிறுத்தம் வரை செல்லும் பலரும் ரோட்டில் தான் செல்கின்றனர். நடை பாதை இருந்தும் இந்த நிலை உள்ளது. ஏற்கனவே இந்த மல்லாங்கிணர் ரோடு இருபுறமும் வரும் கனரக வாகனங்களால் பெரிதும் பரிதவிப்பில் உள்ளன.
இருபுறமும் வந்து செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தான் நகரின் பல பகுதிகளிலும் உள்ளது. நடை பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளன. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்துார் உள்ளிட்ட அனைத்து நெரிசல் மிகுந்த ரோடுகளைக் கொண்ட பகுதிகளிலும் நடைபாதைகள் இருந்தும் அவை ஆக்கிரமிப்பின் பிடியில் தான் உள்ளன. இதனால் மக்கள் ரோட்டில் நடந்து செல்கின்றன. பஸ்கள் ஒதுங்க முடியாமல் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் ரோட்டின் ஓரமாக நடந்து செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் அபாயமும் உள்ளது.
கேரளாவில் நடைபாதை அமைத்து அதற்கென தடுப்பு போட்டுள்ளனர். மதுரை, துாத்துக்குடி மாநகராட்சிகளிலும் ஒரு சில பகுதகிளில் தடுப்புகள் அமைத்து நடைபாதை போட்டுள்ளனர். விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நகராட்சிகளிலும் இது போன்று பேவர் பிளாக் நடைபாதை போட்டு தடுப்பு அமைத்தால் ஆக்கிரமிப்பது தடுக்கப்படும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகம், சாலையோர வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் தரப்புடன் முத்தரப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

