/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிராமப்புற ஓட்டு சாவடி பள்ளிகளில் தாசில்தார்கள் ஆய்வு
/
கிராமப்புற ஓட்டு சாவடி பள்ளிகளில் தாசில்தார்கள் ஆய்வு
கிராமப்புற ஓட்டு சாவடி பள்ளிகளில் தாசில்தார்கள் ஆய்வு
கிராமப்புற ஓட்டு சாவடி பள்ளிகளில் தாசில்தார்கள் ஆய்வு
ADDED : பிப் 16, 2024 04:46 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: தினமலர் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகாவில் கிராமப்புறங்களில் ஓட்டுச்சாவடியாக செயல்படும் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து தாசில்தார்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கிராமப்புறங்களில் ஓட்டுச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளில் போதிய சுகாதார வளாகம், குடிநீர், மின்சாரம், உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு தேர்தல் பணியாற்ற வரும் பெண் அலுவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரடி ஆய்வு செய்து சரி செய்ய வேண்டுமென, பிப்.5 தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.
இதனையடுத்து கலெக்டர் ஜெயசீலன் கிராமப்புற ஓட்டுச்சாவடி பள்ளிகளில் நேரடி ஆய்வு செய்ய தாசில்தார் களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அச்சங்குளம், நக்கமங்கலம், சித்தாலம்புத்தூர், கடம்பன்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள துவக்க பள்ளிகளை தாசில்தார் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
அவருடன் சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் உடன் சென்றனர். பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
இதேபோல் வத்திராயிருப்பு தாலுகாவில் தாசில்தார் முத்துமாரி பல்வேறு கிராமப்புறங்களில் ஓட்டுச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் நேரடி ஆய்வு செய்தார். மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் கிராமப்புற ஓட்டுச்சாவடி பள்ளிகளில் தாசில்தார்கள் ஆய்வு செய்து வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.