/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாலை மறைக்குளத்தில் பயன்பாடில்லாத மினரல் பிளான்ட்
/
சாலை மறைக்குளத்தில் பயன்பாடில்லாத மினரல் பிளான்ட்
ADDED : ஏப் 27, 2025 06:47 AM

காரியாபட்டி : சாலை மறைக்குளத்தில் பயன்பாடு இன்றி மினரல்  பிளான்ட் கிடப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
காரியாபட்டி சாலை மறைக்குளத்தை சுற்றி நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக உள்ளது. உள்ளூரில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. உப்பு தண்ணீரை பயன்படுத்தி வந்ததால் பலருக்கு  சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. தண்ணீர் தான் காரணம் என அறியப்பட்டதையடுத்து அங்கு மினரல் பிளான்ட் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து இரு இடங்களில் மினரல் பிளான்ட் அமைக்கப்பட்டது. மக்கள் மினரல் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மினரல் பிளான்ட் கடந்த ஒரு மாதமாக பழுதாகி பயன்பாடு இன்றி உள்ளது. கோடை காலம் துவங்கி கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிக அளவில் குடிநீர் தேவைப்படுவதால்  தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
அனைத்து மக்களும் ஒரே இடத்தில் வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்க வேண்டியிருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க பழுதாகி உள்ள மினரல் பிளான்ட்டை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

