தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆடி அமாவாசை முன்னேற்பாடு ஆய்வு

ஆடி அமாவாசை முன்னேற்பாடு ஆய்வு

ஆடி அமாவாசை முன்னேற்பாடு ஆய்வு


UPDATED : ஆக 05, 2026 07:41 PM

ADDED : ஆக 05, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 07:41 PM ADDED : ஆக 05, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள குடிநீர், சுகாதார வளாகம், பஸ் போக்குவரத்து, மருத்துவ வசதி உட்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை நேற்று காலை கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, சப் கலெக்டர் முகமது இர்பான், தாசில்தார் சரஸ்வதி, அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

மதியம் வத்திராயிருப்பு போலீஸ் ஸ்டேஷனில், தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டி. ஐ.ஜி. அபிநவ் குமார், மதுரை எஸ்.பி. தேவநாதன், விருதுநகர் எஸ்.பி. கவுதம் கோயல், ஏ.எஸ்.பி,, டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us