/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா கொடியேற்றம்
/
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா கொடியேற்றம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா கொடியேற்றம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி திருவிழா கொடியேற்றம்
ADDED : ஆக 09, 2025 02:55 AM

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆண்டு தோறும் தை, ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆக.15ல் ஆடிகடைசி வெள்ளி பெருந்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று கோயில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது.
பட்டர்கள் காசி விஸ்வ நாதன், முத்து ஆகியோர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் செய்தனர். பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபா ஆராதனை நடந்தது.
ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் இளங்கோவன், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை பூசாரிகள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் அம்மனுக்கு பொங்கலுக்கு முடி காணிக்கை செலுத்தியும் கை, கால் கண்மலர் என பல்வேறு நேர்த்திக்கடன் களை செலுத்தி வழிபட்டனர். கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாத்துாரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. டி.எஸ்.பி.நாக ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டம் இருக்கன்குடி தேவேந்திரகுல வேளாளர் வியா பாரிகள், மக்கள் தங்களுக்கு எப்போதும் போல் பரிவட்டம் கட்ட வேண்டும் என கூறி கடைகளை அடைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் ராஜாமணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எஸ்.பி., கண்ணன் ஆகியோர் நீதிமன்றம் யாருக்கும் பரி வட்டம் கட்டக்கூடாது என உத்தரவிட்டு உள்ளது எனக் கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.