
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையம் வில்லாளி வீரன் ஐயப்ப பஜனை சேவா சங்கம் சார்பில் ஐயப்பனுக்கு ஆவணி மாத சிறப்பு பூஜை நடந்தது. ராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு ஆவணி மாதத்தை முன்னிட்டு இரவு 8:00 மணிக்கு அஷ்டாபிசேகங்கள், அதனைத் தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது.
பின் உற்ஸவர் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வில்லாளி வீரன் ஐயப்ப பஜனை சேவா சங்கத்தினர் செய்தனர்.