/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனைகளில் ஆவின் பாலகம், சுய உதவிக்குழு உணவகங்கள்: மாவட்ட நிர்வாக நடவடிக்கை அவசியம்
/
அரசு மருத்துவமனைகளில் ஆவின் பாலகம், சுய உதவிக்குழு உணவகங்கள்: மாவட்ட நிர்வாக நடவடிக்கை அவசியம்
அரசு மருத்துவமனைகளில் ஆவின் பாலகம், சுய உதவிக்குழு உணவகங்கள்: மாவட்ட நிர்வாக நடவடிக்கை அவசியம்
அரசு மருத்துவமனைகளில் ஆவின் பாலகம், சுய உதவிக்குழு உணவகங்கள்: மாவட்ட நிர்வாக நடவடிக்கை அவசியம்
ADDED : நவ 01, 2025 05:32 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆவின் பாலகங்கள், சுய உதவிக்குழு உணவகங்கள் அமைத்து மக்களுக்கு நியாயமான விலையில் பால் பொருட்கள், உணவுகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு அதிக அளவில் மகப்பேறு, விபத்து காயத்திற்கான சிகிச்சைகள், பரிசோதனைகள் நடக்கிறது.
ஆனால் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு செயல்படும் கேண்டீனில் பால் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.
இதே போல தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததால் அதிக விலை கொடுத்து நோயாளிகள் பால் பொருட்கள், உணவுகளை வாங்கும் நிலை உள்ளது.
இந்த பிரச்னையை போக்க அரசு மருத்துவமனைகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் உணவகங்கள், ஆவின் பாலகங்கள் அமைத்து செயல்படுத்தினால் நியாயமான விலையில் உணவுகள் நோயாளிகளுக்கும், அவர்களை உடன் இருந்து பார்த்துக்கொள்ளும் உறவினர்களுக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் கிடைக்கும்.
மேலும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் டெண்டர் எடுத்து கேண்டீன் நடத்துவதால் அனுமதிக்கப்பட்ட பகுதியை விட கூடுதல் பகுதியை சேர்த்து ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால் மருத்துவமனைகளில் தேவையான கட்டுமானங்களை செய்வதற்கு போதிய இடமில்லாத நிலை உருவாகியுள்ளது. புறக்காவல் நிலையங்கள் தகர செட்டில் அமைத்தும், மருத்துவமனையில் ஒரு அறையில் செயல்படும் நிலை நீடிக்கிறது.
எனவே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆவின் பாலகங்கள், சுயஉதவிக்குழுக்களின் உணவகங்கள் அமைத்து நியாயமான விலையில் பால் பொருட்கள், உணவுகள் அனைவருக்கும் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

