/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாய நிலங்களுக்கு செல்லும் ரோடு துண்டிப்பு -- விளை பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல்

ADDED : நவ 01, 2025 05:32 AM
சேத்துார்: சேத்துார் மலையடிவார விவசாய தோப்புகளுக்கு செல்லும் பாதை அமைத்த மூன்று மாதத்தில் வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டதால் விளை பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பிராவடி கணவாய் அடுத்து நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா தோப்புகள் சாகுபடி நடந்து வருகிறது.
இப்பகுதியில் இருந்து விளை பொருட்களை கொண்டு வரும் பாதை சேதமடைந்த நிலையில் இருந்ததால் புதிதாக அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.2 கோடி மதிப்பில் 2.3 கி.மீ தொலைவிற்கு பிராவடி கண்மாய் பாலம் முதல் செல்லப்பிள்ளை ஊருணி மேற்கு பகுதி வரை புதிய தார் ரோடு அமைக்கப்பட்டது.
கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த கனமழையால் பிரதான ஓடையில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் தோப்புகளில் புகுந்தது. இதில் ரோடு நான்கு இடங்களில் துண்டாகியுள்ளதுடன் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி கந்தன்: தற்போதைய கனமழைக்கு தாங்காமல் பல இடங்களில் ரோடு துண்டிக்கப்பட்டதால் ஒரு வாரமாக விளைந்துள்ள தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ரோட்டின் தரமும் குறைவாக உள்ளதால் பல இடங்களில் பக்கவாட்டில் பிடிமானம் இன்றி ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை முறையாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.