/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பட்டாசு கடையில் விபத்து
/
சிவகாசி பட்டாசு கடையில் விபத்து
ADDED : அக் 06, 2025 01:06 AM

சிவகாசி:சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 28. இவர், சிவகாசி -- சாத்துார் ரோடு, மயிலாடுதுறையில், 'ஜெயலட்சுமி கிராக்கர்ஸ்' என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்த தொழிலாளர்கள், விற்பனையில் ஈடுபட்டனர். காலை 10:30 மணிக்கு கடையில் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள், சரியாக வெடிக்கின்றனவா என, கடை அருகே தொழிலாளர்கள் சோதனை செய்தனர்.
அப்போது தீப்பொறி பறந்து கடையில் இருந்த பட்டாசுகளில் பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முடியாத நிலையில், உடனடியாக தொழிலாளர்கள் வெளியேறினர். சிவகாசி தீயணைப்புத்துறையினர் மூன்று வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. வெடி விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வீணாயின. ரோட்டின் ஓரத்தில் கடை இருந்ததால், அவ்வழியாக ஒரு மணி நேரம் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.