/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆம்னி பஸ்- -- லாரி மோதி பற்றிய தீ பஸ் எரிந்து சேதம்
/
ஆம்னி பஸ்- -- லாரி மோதி பற்றிய தீ பஸ் எரிந்து சேதம்
ஆம்னி பஸ்- -- லாரி மோதி பற்றிய தீ பஸ் எரிந்து சேதம்
ஆம்னி பஸ்- -- லாரி மோதி பற்றிய தீ பஸ் எரிந்து சேதம்
ADDED : அக் 06, 2025 01:44 AM

விருதுநகர்:விருதுநகர் -- சாத்துார் நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ், சிமென்ட் லோடு லாரி மோதியதில் உராய்வினால் தீப்பற்றியது. இதில் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. பஸ், லாரி டிரைவர்கள், பஸ் கிளீனர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்துார் பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ராகவன் 42. இவர் நேற்று மாலை சிமென்ட் லோடு ஏற்றிய லாரியில் தென்காசி செல்ல நான்கு வழிச்சாலை நோக்கி ஓட்டி வந்தார். கோவில்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கணேஷ் குமார் 22, பயணிகள் இல்லாத ஆம்னி பஸ்சை சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ஓட்டி சென்றார். இவருடன் கிளீனராக ஏர்வாடி தளவாய்புரம் காலனியைச் சேர்ந்த மாதேஷ் 20, இருந்தார்.
ஆவுடையாபுரம் விலக்கு அருகே பாலத்தில் இறங்கிய ஆம்னி பஸ், சர்வீஸ் ரோட்டில் இருந்து நான்கு வழிச்சாலை ஏற முயன்ற லாரியில் மோதியது. இதில் உராய்வினால் ஆம்னி பஸ்சில் தீப்பற்றியது. பஸ் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராகவன் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும், பஸ் டிரைவர் கணேஷ்குமார், கிளினர் மாதேஷ் சாத்துார் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.