/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் மெயின் ரோட்டில் குவிந்த மணலால் விபத்து அபாயம்
/
சாத்துார் மெயின் ரோட்டில் குவிந்த மணலால் விபத்து அபாயம்
சாத்துார் மெயின் ரோட்டில் குவிந்த மணலால் விபத்து அபாயம்
சாத்துார் மெயின் ரோட்டில் குவிந்த மணலால் விபத்து அபாயம்
ADDED : டிச 12, 2024 04:47 AM

சாத்துார்: சாத்துார் மெயின் ரோட்டில் குவிந்துள்ள மணலால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
சாத்துார் பெட்ரோல் பல்க் முதல் முக்கு ராந்தல் வரையிலான மெயின்ரோட்டில் டிவைடர் அமைக்கப்பட்டு இருவழிச்சாலையாக உள்ளது. டிவைடர் அருகிலும் ரோட்டின் ஓரத்திலும் அதிகளவு மணல் பரவி கிடக்கிறது.
இந்த மணல் பலத்த காற்று வீசும் போதும் அதிவேகமாக நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டில் செல்லும் போதும் புழுதி மணலாக மாறி நகர் பகுதியில் புகை மண்டலமாக காட்சி தருகிறது. வாகன ஓட்டிகள் புழுதி மணல் காரணமாக கண்ணில் துாசி படிந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிலர் நிலை தடுமாறி முன்னால் செல்லும் வாகனத்தில் மோதி கீழே தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் இந்த மணலை அகற்றாமல் அப்படியே விட்டு விடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மெயின்ரோட்டின் இருபுறமும் டிவைடர் பகுதியிலும் குவிந்துள்ள மணலை அகற்ற நகராட்சியும் நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.