/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்
/
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்
சாத்துார் சர்வீஸ் ரோட்டில் குவிந்துள்ள மணலால் விபத்து அபாயம்
ADDED : மே 10, 2025 07:01 AM
சாத்துார்: சாத்துார் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குவிந்துள்ள மணலால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சாத்துார் சர்வீஸ் ரோட்டில் இருபுறமும் பாதி ரோடு வரை புழுதி மண் பரவி உள்ளது.
சர்வீஸ் ரோடு அருகில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைக்கு இருசக்கர வாகனங்களை கொண்டு செல்வதற்காக சர்வீஸ் ரோட்டில் ஓரத்தில் மணலைக் கொட்டி மேடு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த மணல் மழை பெய்யும் பொழுது கரைந்து தற்போது ரோடு முழுவதும் பரவியுள்ளது. இந்த ரோட்டில் வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் திடீரென பிரேக் போடும்போது ரோட்டில் பரவி கிடக்கும் புழுதி மணலால் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர்.
நகாய் அதிகாரிகள் சர்வீஸ் ரோட்டில் பரவி உள்ள புழுதிமண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.