/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான மின்கம்பத்தால் விபத்து அபாயம்
/
சேதமான மின்கம்பத்தால் விபத்து அபாயம்
ADDED : நவ 10, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே பேராலி ஊராட்சியில் மெயின் ரோட்டில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வீட்டின் அருகே பல ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட மின்கம்பம் உள்ளது.
இதை முறையாக பராமரிக்காததால் சேதமாகி எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
இந்த சேதமான மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என மின்வாரியத்திடம் பல முறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது தொடர்ந்து மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் சேதமான மின்கம்பம் விழுந்தால் பேராலி பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும் நிலை உருவாகியுள்ளது.

