/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீட்டில் போலி மருத்துவம்: பெண் மீது வழக்கு
/
வீட்டில் போலி மருத்துவம்: பெண் மீது வழக்கு
ADDED : நவ 10, 2025 12:47 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் போலி மருத்துவம் பார்த்த பெண் மீது மெடிக்கல் கவுன்சில் சட்ட விதிப்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மங்காபுரம் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மனைவி சுகுணா 42. இவர் தனது வீட்டில் வைத்து மருத்துவம் பார்ப்பதாக விருதுநகர் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் காளிராஜுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து டாக்டர் காளிராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நவ. 6ல் அவரது வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் முதல் உதவி சிகிச்சை அளிப்பதில் டிப்ளமோ படித்துள்ள நிலையில் சுகுணா மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசில் டாக்டர் காளிராஜ் புகார் அளித்தார். சுகுணா மீது மெடிக்கல் கவுன்சில் சட்ட விதிப்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

