/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்வீஸ் ரோடு வடிகால் சிலாப் இல்லாததால் விபத்து அபாயம்
/
சர்வீஸ் ரோடு வடிகால் சிலாப் இல்லாததால் விபத்து அபாயம்
சர்வீஸ் ரோடு வடிகால் சிலாப் இல்லாததால் விபத்து அபாயம்
சர்வீஸ் ரோடு வடிகால் சிலாப் இல்லாததால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 29, 2025 12:13 AM

விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வடிகால் இல்லாததால் விபத்து அபாயம் ஏற் பட்டுள்ளது.
விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள், வாகன ஓட்டிகள் சர்வீஸ் ரோட்டை தான் முக்கிய ரோடாக பயன்படுத்தி வருகின்றனர். இருபுறமும் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சர்வீஸ் ரோட்டில் உள்ள வடிகாலின் மேல் சிலாப்கள் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக்கிடங்கில் இருந்து ஆர்.டி.ஓ., அலு வலகம் வரை சிலாப்கள் உள்ளன. ஆனால் பெட்ரோல் பங்கில் இருந்து சிலாப்கள் சரிவர இல்லை. மேலும் இவ்வழியை பாதசாரிகளும் பயன்படுத்துவதால், இருபக்கமும் லாரிகள் வந்தால் ஒதுங்க முடியாமல் தடுமாறி வடிகாலில் விழும் நிலை உள்ளது.
இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இருபுறமும் வாகனங்கள் வருவதால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப் பட்டுள்ளன.
இதே போல் தேவையான இடங்களில் வடிகால்கள் மீது சிலாப்கள் வைத்தால் வசதியாக இருக்கும். மேலும் வடிகால் நீரில் குப்பை சேர்வதும் குறையும்.