/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விபத்தில் பலி: ரூ.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
/
விபத்தில் பலி: ரூ.95 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : மார் 01, 2024 01:28 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம்ராஜபாளையத்தில் மினி வேன் மோதியதில் பலியான மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பால்பாண்டி 29, குடும்பத்திற்கு ரூ. 95 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் ஆவாரம்பட்டி தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி; இவரது மனைவி மணிமேகலை, 28. இவர் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகளிர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
2021 செப். 13 காலை 11:00 மணிக்கு பால்பாண்டி, தனது டூவீலரில் மனைவி மணிமேகலையை பின்னால் உட்கார வைத்து, சத்திரப்பட்டி ரோட்டில் செல்லும்போது, அவரை முந்த முயன்ற மினிவேன் மோதியதில் பால்பாண்டி சம்பவ இடத்தில் இறந்தார். மணிமேகலை காயமடைந்தார். ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் பலியான பால்பாண்டி குடும்பத்திற்கு ரூ. 95 லட்சத்து 85 ஆயிரத்து 600ஐ, சென்னை ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீடாக வழங்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

